மனிதக் கழிவை அகற்ற மறுத்த தூய்மை பணியாளர் - கடைசியில் நேர்ந்த அநீதி
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் மனிதக் கழிவை அகற்றச்சொல்லி, தூய்மை பணியாளர் இழிவுபடுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் கணவரை இழந்த பட்டியலின் பெண் ஒருவர் கடந்த 25 ஆண்டுகளாக நிரந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன்னர், பொதுவெளியில் இருந்த மனிதக்கழிவை அகற்றுமாறு இந்த பெண் தூய்மை பணியாளரை, பொறுப்பு மேற்பார்வையாளரான சேக்கிழார் என்பவர் நிர்பந்தித்ததாக தெரிகிறது. இதற்கு, நாங்கள் குப்பையை எடுக்கவே வந்திருக்கிறோம், மனிதக்கழிவை அகற்ற அல்ல எனக்கூறி அந்த பெண் மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சேக்கிழார், அதிகாரிகளிடம் சொல்லி தனக்கு மெமோ கொடுத்துவிட்டதாக பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story