கொசு வலையுடன் கூட்டத்திற்கு வந்த ஒன்றிய கவுன்சிலர்

x

டெங்கு காய்ச்சல் தடுப்பு என்ற பெயரில் பல லட்சம் முறைகேடு நடைபெற்றதாக கூறி, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய அலுவலக கூட்டத்திற்கு கவுன்சிலர் ஒருவர் கொசுவலையுடன் வந்தார். 2 வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் தியாகராஜனின் இந்த நூதன எதிர்ப்பு, கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பிற்காக கடந்த 2 மாதத்தில் 13 லட்சம் வரை பணி செய்ததாகவும், வராத டெங்குக்கு எந்த பகுதிக்கு செலவு செய்தார்கள் என கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்