கடையில் செல்போனில் கை வைத்த இளைஞர்களை தண்டித்த கர்மா..!

x

ஸ்ரீபெரும்புதூர் செல்போன கடையில் கைவரிசை காட்டிய கொள்ளையனை போலீசார் பிடித்த நிலையில் மாவுக்கட்டு போடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே பிரேம் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள 54 செல்போன்களை திருடி சென்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சென்னையைச் சேர்ந்த பாபு மற்றும் யுவராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் போலீசார் துரத்தும் பொழுது கீழே விழுந்ததில் யுவராஜ் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்