நாளை கல்யாணம்.. இன்று காதலியை கொடூரமாக கொன்ற காதலன் - காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்
ஸ்ரீபெரும்புதூர் அருகே காதலியை திருமணம் செய்ய மறுத்து கொலை செய்துவிட்டு விபத்து போல் சித்தரித்து நாடகமாடிய காதலனை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் கொளத்தூரை சேர்ந்த விக்னேஸ்வரிக்கு அவர் காதலித்து வந்த தீபனுடன் வரும் 5ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காதலனுடன் டூவீலரில் வெளியே சென்ற விக்னேஸ்வரி படுகாயத்துடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து , தலைமறைவாக இருந்த தீபனை பிடித்து விசாரித்தனர். அதில், இருவரும் தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்ததும், அதன் பிறகு ஏற்பட்ட தகராறில் விக்னேஸ்வரியை தீபன் டைல்ஸ் கல்லால் தாக்கி கொலை செய்ததும் அம்பலமானது. இதையடுத்து போலீசார் தீபனை கைது செய்தனர்.
Next Story
