குழந்தை பிறந்த 2 மணி நேரத்தில் நெஞ்சுவலியில் இறந்த தாய்-தாயை தேடி அழும் பிஞ்சு..மார்ச்சுவரியில் உடல்

x

சுங்குவார்சத்திரம் அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார் மனைவி, நிறை மாத கர்ப்பிணி ஆர்த்தி, கடந்த ஏழு மாத காலமாக சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், பரிசோதனை செய்து வந்தார். இந்த நிலையில் ஆர்த்திக்கு திங்கள்கிழமைபிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் அந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆர்த்திக்கு சுக பிரசவத்தில், ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த இரண்டு மணி நேரத்துக்கு பின், ஆர்த்திக்கு அதிக நெஞ்சு வலி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம், ஆர்த்தியை தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே, ஆர்த்தி பரிதாபமாக, உயிரிழந்தார். இதனால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆர்த்தி உயிரிழப்புக்கு, அனிதா என்ற தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் கவன குறைவே காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது இளம் பெண்ணின் உடல், சவீதா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம், சுகாதாரத் துறை அதிகாரிகள், சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்