மருமகளிடம் தப்பாக பேசிய தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகன்! தூத்துக்குடியில் அதிர்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் மகிழ்ச்சிபுரத்தில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். பாத்திமா நகரை சேர்ந்த ராஜ் என்பவர் மகிழ்ச்சிபுரத்தில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இரண்டாவது மகனான ஜேம்ஸ் அண்ணாநகரில் மனைவியுடன் குடியிருந்து வருகிறார். இந்நிலையில், பைக்கில் சென்ற தந்தை ராஜை, அவரது மகன் ஜேம்ஸ் வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து போலீசார் ஜேம்ஸை கைது செய்து விசாரித்ததில், தனது மனைவியிடம் தவறான எண்ணத்துடன் பேசியதால் தந்தையை கொலை செய்ததாக ஜேம்ஸ் தெரிவித்திருக்கிறார்.
Next Story