18 வயது நிரம்பாதவர்களின் சோசியல் மீடியா அக்கவுண்ட்... மத்திய அரசு போட்ட எண்டு கார்ட்

x

18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கட்டுப்பாடு உள்ளிட்டவையுடன் வரைவு டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு விதிகள் வெளியாகியுள்ளன. டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு, 13 மாதங்களுக்கு பிறகு டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், சிறார்கள் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்க பெற்றோரின் ஒப்புதல் அவசியம் எனவும், பெற்றோரின் அடையாளம் மற்றும் வயதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பயனர்களின் சம்மதத்தின் பிறகே தனிப்பட்ட தரவை பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ள மத்திய அரசு,ஈ-காமர்ஸ், ஆன்லைன் விளையாட்டு, சமூக வலைதளங்களுக்கு இந்த விதிகள் பொருந்தும் என தெளிவுப்படுத்தியுள்ளது.இந்த விதிகள் குறித்து பிப்ரவரி 18ஆம் தேதிக்குள் கருத்துக்கள் தெரிவிக்க வேண்டும் எனவும், அதனை பரிசீலித்து இறுதியாக விதிகள் வகுக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்