பென்னாகரம் அருகே மலைவாழ் கிராமத்தை சேர்ந்த சிறுமி, பாம்பு கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள அலக்கட்டு மலைவாழ் கிராமத்தில், 14 வயது சிறுமியை விஷப்பாம்பு கடித்துள்ளதாக கூறப்படுகிறது. சாலை வசதி இல்லாததால் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் தூரிகட்டி சிறுமி தூக்கிச் செல்லப்பட்ட நிலையில், 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெல்ரம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், நள்ளிரவு 11 மணிக்கு சிறுமியின் உடலை மலைப்பகுதிக்கு எடுத்துச் சென்று மக்கள் அடக்கம் செய்ய முயன்றனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த போலீசார், பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் உடலை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Next Story