TNPSC புதிய தலைவர்..! யார் இந்த எஸ்.கே. பிரபாகர்? | S.K.Prabhakar
நீண்ட காலம் காலியாக இருந்த டிஎன்பிசி தலைவர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஐஏஎஸ் அதிகாரி எஸ்கே பிரபாகர் யார் என்பதை பார்க்கலாம்...
கடந்த 1966 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் பிறந்த எஸ்.கே.பிரபாகர் ஐஐடி டெல்லியில் எம்டெக் முடித்தவர். கடந்த 1989 ஆம் ஆண்டு நேரடி ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகி, தமிழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் அவரது செயலாளர்களில் ஒருவராக பணியாற்றியவர். தமிழக அரசில் தகவல் தொழில்நுட்பத்துறை, வணிகவரித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி அனுபவம் பெற்றவர். 2019 -ல் கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார். 2021-ல் திமுக ஆட்சியமைந்த போது முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரை உள்துறை செயலராக நியமித்தார். பின்னர் வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டார். இப்போது ஓய்வு பெற இன்னும் 17 மாதங்கள் உள்ள நிலையில், தற்போது எஸ்.கே.பிரபாகர் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.