"இது முற்றிலும் தவறான செய்தி.. " - அமைச்சர் சிவசங்கர் கொடுத்த விளக்கம்

x

முதலமைச்சர் உத்தரவுப்படி, சிவகங்கை மாவட்டம், சோழபுரம், புனித ஜஸ்டின் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் சாந்தா கல்வியியல் கல்லூரி முன்பாக பேருந்துகள் தொடர்ந்து நின்று செல்வதாக, அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பேருந்து நின்று செல்வதை கண்காணிக்க தீனதயாளன் என்ற பரிசோதகர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பேருந்துகள் தொடர்ந்து நின்று செல்வதை கள ஆய்வில் அலுவலர்கள் உறுதி செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கல்லூரி முன்பாக பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறிய அமைச்சர் சிவசங்கர், சமூக வலைத்தளங்களில் வரும் செய்தி முற்றிலும் தவறானது, உண்மைக்குப் புறம்பானது என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்