"இரவு நேரப் பணியில் மருத்துவர் இல்லை.." பிறந்த 30 நிமிடத்தில் பிரிந்த பிஞ்சு உயிர்.. கனத்த இதயத்துடன் ததும்பி பேசிய தந்தை
சிவகாசி மேற்கு காலனியில் வசிக்கும் தம்பதி சரவணன்- நிவேதிதா. கர்ப்பிணியான நிவேதிதா, பிரசவத்திற்காக சிவகாசி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த அரை மணி நேரத்திலே இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனை ஏற்காத குழந்தையின் உறவினர்கள், தலைமை கண்காணிப்பாளர் அறையை முற்றுகையிட்ட நிலையில், பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரவு நேர மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும், அவருக்கு பதிலாக யாரும் நியமிக்கப்படாததால் இது போன்ற தவறு நடந்திருப்பதாகவும் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்....
Next Story