யூடியூப் பார்த்து வெடிகுண்டு மேக்கிங் - குலைநடுங்க வைக்கும் சம்பவம்

x

சிவகங்கை அருகே, யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். போலீசார் ரோந்து சென்ற போது ஓட்டக்குளம் கண்மாய்க்கரை அருகே முட்புதரில் பதுங்கியிருந்த மகேஸ்வரன் என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 4 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றிய போலீசார், அவரது கூட்டாளிகளான மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்