வெளியேறும் பல லட்சம் லிட்டர் குடிநீர் - அதிர்ச்சி காரணம்.. வேதனையில் மக்கள்

x

சிவகங்கையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து சாரை சாரையாக, மாதக்கணக்கில் வீணாகி வரும் குடிநீரை, அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

காரைக்குடி அருகே உள்ள சூரக்குடி பகுதியில், ஆயிரத்து 752 கோடியே,13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 6 லட்சத்து 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் தான், பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வரும் அவலம், அரங்கேறி வருகிறது. விரைந்து இதை சரி செய்வதுடன் கிராமங்களுக்கு குடிநீர் தங்கு தடையின்றி கிடைப்பதை அதிகாரிகள், உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்