“கவலை படாதே அம்மா நான் இருக்கேன்“ -பார்வையற்ற மகளின் வைராக்கியம்...நைசாக பேசி காசை அடித்த ஊர் VAO

x

“கவலை படாதே அம்மா நான் இருக்கேன்“

பார்வையற்ற மகளின் வைராக்கியம்

நைசாக பேசி காசை அடித்த ஊர் VAO

விசயம் தெரிந்த நொடி ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்த கலெக்டர்

வீட்டுமனை பட்டா வழங்க லஞ்சம் பெற்று, கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியின் தாயை விஏஓ அலைக்கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தந்தி டிவி செய்தி எதிரொலியாய் விஏஓ சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். முழு விவரங்களையும் பார்க்கலாம் விரிவாக...

கண் பார்வையற்ற நிலையிலும் தன்னம்பிக்கை கொண்டு, சாட் ஃபுட் கேமில் பாராலிம்பிக்கில் கலந்து கொள்ள தகுதி பெற்ற சிவகங்கை மாவட்டம் கீழநெட்டூரை சேர்ந்த சரண்யாவின் குடும்பத்துக்குதான் இந்த நிலைமை...

சரண்யாவின் 11 வயதிலேயே அவரின் தந்தை உயிரிழந்து விட்டது குறிப்பிடத்தக்கது...

இந்நிலையில், படிப்பிற்காக சொந்த ஊரை விட்டு தன் அம்மாவுடன் மதுரை சென்ற சரண்யா, தன் கல்லூரி முடிப்பை முடித்து வீடு திரும்பிய போது, வீடு முற்றிலும் சேதம் அடைந்திருப்பதை கண்டு மனமுடைந்திருக்கிறார்...

இது குறித்து நமது தந்தி டிவி தொலைக்காட்சியில் வெளியான செய்தியின் எதிரொலியாய், மாவட்ட ஆட்சியர் ஆசா அஜித் சரண்யாவிற்கு வீடு கட்டுத் தருவதற்கு ஒப்புதல் வழங்கி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்..

இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன், தங்களின் பூர்வீக வீட்டிற்கு பட்டா வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலரை ராக்கை சரண்யாவின் தாய் ராஜலட்சுமி தொடர்பு கொண்டிருப்பது தெரியவந்திருக்கிறது..

அதற்கு, நான்காயிரம் ரூபாய் கொடுங்கள் ரெடி பண்ணி தருகிறேன் என்று கூறி , 3000 ரூபாயை ஜி பே மூலமும், பின் ஆயிரம் ரூபாயை நேரடியாகவும் லஞ்சமாக பெற்றிருக்கிறார் வி.ஏ.ஓ ராக்கு....

இதனிடையே, நமது தந்தி டிவியில் வெளியான செய்தியின் எதிரொலியாய், வீடு கட்டுவதற்கான ஒப்புதலையும், பட்டாவையும் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து வழங்கிய போது தான், வீட்டு பட்டா வாங்க லஞ்சம் கொடுத்த விவகாரத்தை போட்டு உடைத்திருக்கிறார் சரண்யாவின் தாய்...

கடந்த ஒரு வாரத்திற்கு முன், இது குறித்து அவர் போலீசில் புகாரளிக்கவே, இதையறிந்த விஏஓ லஞ்சம் பெற்ற பணத்தை திருப்பி கொடுப்பதாக பேசி சமாதானப்படுத்தி அலைக்கழித்திருக்கிறார்...

இந்நிலையில், இந்த விவகாரம் ஆட்சியர் ஆஷா அஜித்தின் கவனத்திற்கு செல்லவே, விசாரணையை கையிலெடுத்த அவர் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ ராக்குவை பணியிடை நீக்கம் செய்து அதிரடி காட்டியிருக்கிறார்...

கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மகளுடன் வாழ்க்கை போராட்டத்தில் மன்றாடி கொண்டிருந்த தாயிடம், அவரின் வீட்டிற்கு பட்டா வழங்க விஏஓ லஞ்சம் கேட்டு அலைக்கழித்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது..


Next Story

மேலும் செய்திகள்