குடிகார நண்பர் சொன்னதை நம்பி மனைவி நகைகளை அடமானம் வைத்தவர் தலையில் இறங்கிய இடி...

x

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நகை ஏலம் நடப்பதாக கூறி 23 பவுன் நகையை குறைந்த விலையான ஐந்து லட்ச ரூபாய்க்கு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்த கொத்தனார் ஸ்ரீஹரியிடம் சங்கர் என்பவர் ஏமாற்றியுள்ளார்.

ஒத்தக்கடை பகுதியில் செயல்படும் டாஸ்மாக் பாரில் மது அருந்தும் போது ஸ்ரீஹரிக்கு சங்கருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது தன்னை வங்கி ஊழியர் என ஸ்ரீஹரியிடம் சங்கர் அறிமுகம் செய்து கொண்டார்.

இந்நிலையில், சங்கர் கூறியதை நம்பி தனது மனைவியின் நகையை அடகு வைத்து ஐந்து லட்ச ரூபாயை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து சங்கரிடம் ஸ்ரீஹரி ஐந்து லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். மேலே சென்று நகை வாங்கி வருவதாக கூறிய சங்கர் மாயமானதை அடுத்து தாம் ஏமாற்றப்பட்டதை ஸ்ரீஹரி உணர்ந்துள்ளார். இதையடுத்து, அவர் அளித்த புகாரின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்