"வீடு ஜப்தி செய்யப்பட்டதால் இளைஞர் தற்கொலை"

x

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கடனை முறையாக கட்டாததால் வீடு ஜப்தி செய்யப்பட்டதை அடுத்து, அவமானம் தாங்காமல் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

vovt

திருப்புவனத்தை அடுத்த வைகை வடகரை கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா- லட்சுமி தம்பதி, வீடு கட்டுவதற்காக தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து கடந்த 2016-ஆம் ஆண்டு 4 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். மாதந்தோறும் 10 ஆயிரத்து 67 ரூபாய் வீதம், கடன் தொகை கட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கடனைத் திருப்பிச் செலுத்தி உள்ளனர். ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடன் தவணையை செலுத்தாத நிலையில், வட்டியுடன் சேர்த்து 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் வீட்டுக்கு வந்து தெரிவித்தனர். 15 நாட்கள் அவகாசம் கேட்டும் சம்மதிக்காத நிதி நிறுவன ஊழியர்கள், வீட்டில் இருந்தவர்களை வெளியேற்றி விட்டு வீட்டை பூட்டி விட்டுச் சென்றனர். திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தின் வேலை செய்து வந்த இவர்களின் மகன் முத்துக்காளைக்கு இந்த வஷயம் தெரியவர, உடனடியாக ஊருக்கு வந்த அவர், வீட்டின் பூட்டை உடைத்து வீட்டினுள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்