ஜெ. பிறந்தநாளில் கண்டுகொள்ளாத கட்சியினர் நடுரோட்டில் கண்ணீர் விட்டு அழுத மூத்த பெண் நிர்வாகி
சிவகங்கையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளில் கட்சியின் மூத்த பெண் நிர்வாகியை கட்சியினர் யாரும் கண்டு கொள்ளாததால் பெண் நிர்வாகி கண்ணீர் விட்டு அழுதுள்ளார் .30 ஆண்டுகளாக சிவகங்கை அதிமுக மகளிர் அணி செயலாளராக இருந்த சாந்தி என்ற மூத்த பெண் நிர்வாகி உடல்நலம் குன்றிய நிலையில் மிகவும் சிரமத்தில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கட்சி நிர்வாகிகளிடம் தனது கஷ்டத்தை கூறி உதவி பெறலாம் என்ற எண்ணத்தில் எம்ஜிஆர் சிலை அருகில் சாலையில் தரையில் அமர்ந்து காத்திருந்த அவரை கட்சி நிர்வாகிகள் யாரும் கண்டு கொள்ளாமல் சென்றுள்ளனர்.இதனால் மணம் உடைந்த அவர் கண்ணீர் விட்டு அழுதார்.
Next Story