ஹாஸ்பிடலில் டாக்டர் இல்லாததால் பறிபோன பெண்ணின் உயிர் - வேதனையில் உறவினர்கள் சொன்ன வார்த்தை

x

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, கடந்த 15-ம் தேதி இரவு 8 மணியளவில் செல்வி என்ற மூதாட்டி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு மருத்துவர் இல்லாததால், சிவகங்கையில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ்-க்காக காத்திருந்துள்ளனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆம்புலன்ஸ் வராததால், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் செல்வியை அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி உயிரிழந்த நிலையில், மானாமதுரை மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததே அவரது உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்