கைகளால் கண்ணாடிகளை அடித்து உடைத்த மருத்துவர்.. மானாமதுரையில் பரபரப்பு

x

நீதிமன்ற உத்தரவுபடி விதிகளை மீறி கட்டப்பட்ட மருத்துவமனையை இடிக்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவர் கண்ணாடியை அடித்து உடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் டாக்டர் சுந்தரராஜன் என்பவர் மருத்துவமனை அமைக்க உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற்றார். தரை தளம் மற்றும் இரண்டு தளத்திற்கு அனுமதி பெற்ற நிலையில் மூன்றாவது தளத்திற்கு அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மூன்றாவது தளத்தை இடித்து அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று காலை சிவகங்கை மாவட்ட நகரமைப்பு குழு உதவி இயக்குனர் மற்றும் போலீசார், மூன்றாவது தளத்தை இடித்து அகற்ற மருத்துவமனைக்கு வந்தனர். டாக்டர் சுந்தரராஜன் உயிரிழந்த நிலையில், அவரது மகன் டாக்டர் ஆனந்திடம் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை எடுத்து கூறினர். ஆத்திரமடைந்த டாக்டர் ஆனந்த் கட்டட முகப்பு கண்ணாடி கதவை, அதிகாரிகள் முன், கைகளால் அடித்து உடைத்து சேதப்படுத்தினார். மருத்துவமனை நிர்வாகமே 3வது தளத்தை இடித்து அகற்ற வேண்டும் அல்லது மானாமதுரை நகராட்சி சார்பில் இடித்து அகற்றி அதற்கான செலவை மருத்துவமனை நிர்வாகத்திடம் வசூலிக்க நேரிடும் என எச்சரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்