மகளிர் இலவச பேருந்தில் கட்டணம் வசூல் - கொந்தளித்த பெண்கள்

x
  • சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இயக்கப்பட்ட மகளிர் இலவச பேருந்தில் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக அதில் பயணித்த பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நத்தம், சமுத்திராப்பட்டி, கொட்டாம்பட்டி பகுதியில் ஏறிய பெண்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் பாண்டாங்குடியில் ஏறிய பெண்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்படவில்லை எனவும் அவர்கள் புகார் அளித்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்