களைகட்டிய பிரம்மாண்ட மீன்பிடி திருவிழா.. களத்தில் இறங்கிய ஆயிரம் பேர்.. மீன் பிடித்து கொண்டாட்டம்

x

களைகட்டிய பிரம்மாண்ட மீன்பிடி திருவிழா களத்தில் இறங்கிய ஆயிரம் பேர் போட்டி போட்டு மீன் பிடித்து கொண்டாட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆவினிப்பட்டி கிராமத்தில் உள்ள ஆவினி கண்மாயில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. ஆவினிப்பட்டி, இளையாத்தங்குடி, காவேரிபட்டி உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு ஊத்தா கூடை ,கச்சா , கொசுவலை , அரிவலை உள்ளிட்ட உபகரனங்களை கொண்டு மீன்களை பிடித்தனர். விழாவில் பங்கேற்ற ஆயிரக்கனக்கான மக்கள் விரா, கெழுத்தி, கட்லா, கெண்டை உள்ளிட்ட மீன்களை பிடித்து மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்