நிற்காத பேருந்துகள் - காற்றில் பறக்கவிடப்பட்ட உத்தரவு
சிவகங்கை அருகே கல்லூரியில் அரசுப்பேருந்துகள் நிற்க, முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட உத்தரவு, இரண்டே நாட்களில் காற்றில் பறக்கவிடப் பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்கு சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, சோழபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அரசுப்பேருந்துகள் நின்று செல்ல வேண்டுமென உத்தரவிட்டார். இதையடுத்து பேருந்து நிறுத்தம் என்ற பலகை வைக்கப்பட்ட நிலையில், முதல் 2 நாட்கள் மட்டும் பேருந்துகள் நின்று சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு பின்பு எந்த அரசு பேருந்துகளும் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் நிற்காததால், கல்லூரி மாணவிகள் அவதி அடைந்துள்ளனர்.
Next Story
