முதல்வரிடம் மாணவிகள் வைத்த கோரிக்கை... சில மணி நேரங்களில் நடந்த அதிசயம்

x

முதல்வரிடம் மாணவிகள் வைத்த கோரிக்கை... சில மணி நேரங்களில் நடந்த அதிசயம்

சிவகங்கையில் மாணவிகளின் கோரிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் சில மணி நேரங்களில் நிறைவேற்றியுள்ளார். சிவகங்கையில் உள்ள கல்லூரியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை களஆய்வு மேற்கொண்டார். அப்போது, கல்லூரி அருகே பேருந்து நிறுத்தம் அமைத்து தருமாறு மாணவிகள் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அடுத்த சில மணி நேரங்களில் போக்குவரத்து அதிகாரிகள் கல்லூரி அருகே பேருந்து நிறுத்தம் அமைத்து கொடுத்த‌தால், மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்