துடிக்க துடிக்க இறந்த பள்ளி சிறுவன்.. பெருந்துயரில் தழுதழுக்க பேசிய தந்தை
பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் 14 வயது மகன் கார்த்திக் அங்கன்வாடி மையத்தின் அருகேயுள்ள மின்கம்பத்தின் கீழே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்... அப்போது மின்கம்பத்தில் இருந்து வயர் ஒன்று அறுந்து கார்த்திக் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்... இந்த மின் கம்பத்தை மாற்றக் கோரி பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் அலட்சியம் காட்டியதால் சிறுவனின் உயிர் பறிபோயுள்ளதாகவும், அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வரும் நிலையில் மறுபடியும் இதுபோன்று விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்... மேலும் புகார் மீது நடவடிக்கை கிடைக்காத உதவி பொறியாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்...
Next Story