அத்திப்பட்டியாக மாறி வரும் கிராமம்..ஒரு ஊரே அழிவின் விளிம்பில்..கேட்டாலே மனம் கலங்கும் | Sivagangai

x

சி.கரிசல்குளம் கிராமத்தில் அடிப்படை வசதி இல்லாத்தால், பெரும்பாலான கிராம மக்கள் மதுரைக்கு பிழைப்பு தேடி சென்று விட்டனர். தற்போது அழியும் தருவாயில் நான்கு வீடுகள் மட்டுமே உள்ள நிலையில், அவற்றில் மூன்று மூதாட்டிகள் மட்டுமே வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த சில பலர் மதுரையில் ஆட்டோ ஒட்டி வருகின்றனர். விவசாயக் காலகட்டத்தில் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு வாரத்திற்கு நான்கு முறை ஆட்டோவில் வந்து விவசாயம் பார்த்துச் செல்கின்றனர். ஆனால் அதுவும் தற்போது அந்த விவசாயமும் கொஞ்சம் கொஞ்சமாக அழிய தொடங்கி உள்ளது, 85 ஏக்கர் பரப்பளவு உள்ள கண்மாயில் இருந்து நீர் வெளியே செல்லும் கழுங்கு உடைந்து நாசமாகி விட்டதால், சாக்கு முட்டைகளை வைத்து கழுங்கை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கழுங்கை சரி செய்து தரக் கோரி வரும் திங்கள் அன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொள்ளப் போவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்