ஐயப்ப சாமி குறித்து பாடல்..வெடித்த சர்ச்சை..பெரும் சிக்கலில் பாடகி இசைவாணி | Chennai

x

ஐயப்ப சுவாமி பாடல் குறித்து மக்கள் உணர்வை புண்படுத்தும் வகையில் பாடலை பாடிய கானா பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்ப சுவாமி குறித்து, மக்கள் உணர்வை புண்படுத்தும் வகையில் ஒரு பாடல் வைரலாகி வருவதாகவும், அந்த பாடலை இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் கலாச்சார மையம் நடத்திய நிகழ்ச்சியில் கானா பாடகி இசைவாணி பாடியுள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக நல்லிணக்கம் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பாடல் வரிகளை பயன்படுத்தி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்