`ஜில்லா விட்டு ஜில்லா வந்த..' பாடலை பாடியவரின் துயர நிலை | Pudukottai | Thanthi TV

x

ஈசன் படத்தில் ஜில்லா விட்டு ஜில்லா வந்த பாடல் உட்பட ஏராளமான நாட்டுப்புற பாடல்கள், சினிமா பாடல்களை பாடி பிரபலமானவர் தஞ்சை செல்வி. முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவர், புதுக்கோட்டை மாவட்டம் தெட்சிணாபுரம் கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். கடுமையான வலியுடன் போராடி வரும் அவரை குடும்பத்தினர் கவனித்து வரும் நிலையில், பலமுறை தற்கொலைக்கு முயன்றதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது கணவர் ஐயப்பனும் சினிமாவில் பாடல்கள் பாடி வரும் நிலையில், தஞ்சை செல்வியின் உடல்நிலையை அறிந்த புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி டீன் அவரது வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்ததோடு, உயர்தர சிகிச்சை அளிப்பதாக உறுதி அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்