திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் மனம் உருகி பக்தி பாடல் பாடிய பாடகர் மனோ
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில், சனிக்கிழமையான இன்று ஏராளமான பக்தர்கள் கூடினர்.பக்தர்களுக்கு வெள்ளிக்கவச அலங்காரத்தில் சனீஸ்வர பகவான் அருள் பாலித்தார். பக்தர்கள் நளதீர்த்தத்தில் புனித நீராடி தோஷங்களை தீர்த்துக்கொண்டனர். தொடர்விடுமுறையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் கூடியதால் சுமார் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. திருநள்ளாறு கோவிலில், பாடகர் மனோ தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது மனம் உருகி பக்தி பாடலையும் பாடினார்.
Next Story