திருமணத்தை மீறிய உறவு - பெண் SI மீதான தண்டனை ரத்து
திருமண பந்தத்தை மீறிய உறவு வைத்துக் கொண்டதாக எழுந்த புகாரில், இரண்டு காவல் உதவி ஆய்வாளர்களில், பெண் உதவி ஆய்வாளருக்கு மட்டும் தண்டனை விதித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஒன்றுக்கு மேற்பட்ட அலுவலர்களுக்கு எதிராக ஒரே குற்றச்சாட்டு கூறப்பட்டால், ஒரே விசாரணை அதிகாரியை கொண்டே விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தது. எனவே, பெண் காவலரின் தண்டனையை ரத்து செய்து, ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதிப்படுத்துவதாகவும் 2 நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.
Next Story