சாமியார் வழக்கில் திடுக்கிடும் தகவல் - திடீர் திருப்பம்...
அம்மகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சாமியார் முரளி,,,, கணேசன் என்பவரது வீட்டில் வசித்து வந்தார். இவர் தீர்த்தம் எனக் கூறி ரசாயனத்தை கணேசன், அவரது மனைவி, மகன்கள் உள்ளிட்ட 5 பேருக்குக் கொடுத்ததுடன் தானும் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். கடன் தொல்லை காரணமாக சாமியார் இவ்வாறு செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சாமியார் முரளி, அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். தற்போது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முரளியை கணேசன் குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர். இந்நிலையில், பக்தர்களிடம் சாமியார் முரளி கடனாக பணத்தைப் பெறவில்லை என்றும், தோஷம் கழிப்பதாக பல ஆயிரக்கணக்கில் பணம் வாங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தோஷம் கழிப்பதாக நகைகளை வாங்கி அதனை சாமியார் திரும்பி தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கு கணேசன் குடும்பத்தினரும் உடந்தையாக இருந்தனரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக போலீசார் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.