கேன்சர்..``என் நாட்கள் எண்ணப்படுகின்றன''-உருக்கமாக பேசிய நடிகர்

x

பிரபல கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஷிகான் ஹுசைனி, தான் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புன்னகை மன்னன், வேலைக்காரன், உன்னை சொல்லி குற்றமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், விஜய்யின் பத்ரி படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில், தன்னை பாதித்துள்ள புற்றுநோய்க்கு சிகிச்சையே கிடையாது என்றும், நாட்கள் எண்ணப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் கராத்தே சொல்லிக்கொடுக்கும் இடத்தில் தான் பவன் கல்யாண் கராத்தே கற்றுக்கொண்டார், அதனால் அவர் இந்த இடத்தை வாங்கி கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேபோல் நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்கு ஒரு வில்வித்தை வீரரை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்