டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட அதிரடி உத்தரவு | DGP | shankar jiwal

x

தமிழக காவல்துறையில் , 4 ஏடிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் ஏடிஎஸ்பியாக இருந்த மணிகண்டன், நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் பிரிவின் ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட காவல்துறையின் தலைமையக பிரிவின் ஏடிஎஸ்பியாக இருந்த பிரேமானந்தன் கோவை மாவட்ட காவல்துறையின் தலைமையக பிரிவின் ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி காவல்துறையின் தலைமையக ஏடிஎஸ்பியாக இருந்த தங்கவேல், காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவின் ஏடிஎஸ்பியாகவும், திருவண்ணாமலை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவின் ஏடிஎஸ்பியாக இருந்த சவுந்தரராஜன், நீலகிரி மாவட்ட காவல்துறையின் தலைமையக பிரிவின் ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்