அமைச்சர் செந்தில் பாலாஜி கோர்ட்டில் ஆஜர்

x

அமைச்சர் செந்தில் பாலாஜி கோர்ட்டில் ஆஜர்

போக்குவரத்துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அமைச்சர் செந்தில்பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

கடந்த 2011-15ம் ஆண்டுகளில் மறைந்த ஜெயலலிதாவின் அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது, இந்த முறைகேடு நடந்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு, எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் ஆஜராகினர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2 ஆயிரத்து 222 பேரில், முதல் 100 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதில், இன்று சிலர் ஆஜராகாத நிலையில், அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றம்சாட்டப்பட்ட மேலும் 50 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 25-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்