பிரமாண்ட விழா எடுத்த அமைச்சர் செந்தில்பாலாஜி.. கோவையே பிரமிக்க மெகா சம்பவம்

x

கோவை விழாவின் 17வது ஆண்டு தொடக்க நிகழ்ச்சியில், ஏராளமான பொதுமக்கள் கலைநிகழ்ச்சிகளை கண்டுரசித்தனர்.

கோவை விழாவின் 17வது ஆண்டு தொடக்க நிகழ்ச்சி மற்றும் கோவை மாவட்டத்தின் 220-வது ஆண்டு நிகழ்ச்சி, காந்திபுரத்தில் உள்ள கிராஸ்கட் சாலையில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தின் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் கலந்து கொண்டு உற்சாக நடனமாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்டத்தின் வளர்ச்சி தமிழ்நாட்டின் வளர்ச்சி என்று தெரிவித்தார். மேலும் கோவை மாவட்ட வளர்ச்சிக்காக முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்