"விஷன் 2030 50k" - சொந்த ஊரில் அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சிக்னல்
கரூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி தானும் மாரத்தானில் கலந்து கொண்டார். 2030-ம் ஆண்டுக்குள் கரூரின் வா்த்தக இலக்கான, 50 ஆயிரம் கோடி ரூபாயை அடையும் வகையில், "விஷன் 2030 50k" என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சுமார் 6 ஆயிரம் பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டியை கரூா், திருவள்ளுவா் மைதானத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற அதிவேக நடை போட்டியில் ஏராளமான பொதுமக்களுடன் சேர்ந்து அமைச்சர் நடந்து சென்றார்.
Next Story