சக பணியாளரை விஷம் கொடுத்து கொலை..பாபநாசம் படத்தை மிஞ்சிய சம்பவம்- சேலம் அருகே அதிர்ச்சி

x

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த கணேஷ் பெரமனூரில் உள்ள தனியார் டிரேடிங் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த கம்பெனியில் மண்டல மேலாளராக யுவராஜ் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பெனிக்கு சென்று வந்த கணேஷின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அங்கு அவருக்கு மேற்கொண்ட சோதனையில் உடலில் விஷம் கலக்கப்பட்டு இருப்பது தெரிய வந்ததால் உடனடியாக போலீசுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கணேஷ் உயிரிழந்ததால் கொலை வழக்காக மாற்றிப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மேலாளர் யுவராஜூக்கும், கணேஷுக்கும் தகராறு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாகச் சந்தேகம் அடைந்த போலீசார், யுவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய போது சொல்லி வைத்தாற் போல் அனைவரும் ஒரே மாதிரியான பதில்களை கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்