100 நாள் வேலை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சீமானின் தாய்.. பரபரப்பில் சிவகங்கை
மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் அவருடைய தாயார், 100 நாள் வேலை கேட்டு, கிராம மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள அரணையூர் கிராமத்தைச் சேர்ந்த சீமானின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அவருடைய தாயார் அன்னம்மாள், கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். மத்திய அரசின் திட்டமான 100 நாள் வேலை திட்டத்தை சீமான் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், அவருடைய சொந்த ஊரான அரணையூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு 100 நாள் வேலை முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறி கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சீமானின் தாயார் அன்னம்மாளும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.