புதிய அவதாரம்... சீமான் கையில் எடுத்த வித்தியாசமான யுக்தி
நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் நிலையில், வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சற்று வித்தியாசமாக அறிமுகம் செய்கிறார்... இயக்குநராக புரட்சிகர படங்களை இயக்கிய சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் பறிக்கப்பட்டு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது... இந்நிலையில் வேட்பாளர்களையும் வாக்குறுதிகளையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் சீமான் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். மருத்துவர் வழக்கறிஞர் என பல்துறைகளைச் சேர்ந்தவர்கள் நாம் தமிழர் சார்பில் வேட்பாளர்களாகக் களமிறக்கப்படும் நிலையில், ஒவ்வொரு வேட்பாளரையும் தனித்தனியே பேச வைத்து ஒளிப்பதிவு செய்துள்ளார்...
Next Story