சீமான் மீது வரிசையாக குவியும் புகார்கள் | Seeman | Thanthi TV

x

பெரியார் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த சீமான் மீது, ஒரே நாளில், தி.மு.க. உள்ளிட்ட நான்கு கட்சிகள், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது சீமான் காரை அடித்து நொறுக்கினர். தொடர்ந்து, தி.மு.க. சட்டத்துறை மாநில துணை செயலாளர் மருது கணேஷ், தி.மு.க. நிர்வாகி ரகு, தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி, திராவிட விடுதலை கழகத்தின் மாவட்ட செயலாளர் உமாபதி ஆகியோர், தனித்தனியாக சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சீமான் மீது ஒரே நாளில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 4 புகார்கள் குவிந்தன.


Next Story

மேலும் செய்திகள்