கொச்சின் டூ மூணாறு... நீரிலும், வானிலும்... சீறி பறந்த டூயல் விமானம்... மிரட்டும் காட்சி

x
  • ஆந்திராவைத் தொடர்ந்து தென்னகத்து காஷ்மீர் என வர்ணிக்கப்படும் கேரள மாநிலம் மூணாறுக்கு கொச்சியில் இருந்து கடல் விமானம் பறந்தது..
  • கடல் விமான போக்குவரத்து திட்டத்தின்படி நீரிலும், வானிலும் செல்லும் வகையில் கடல் விமானம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போல்ஹாட்டி பேலஸ் பகுதி கடலில் இருந்து மூணாறு அருகில் உள்ள மாட்டுப்பட்டி அணைக்கு விமானம் இயக்கப்பட்டது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 8 இருக்கைகளைக் கொண்ட இந்த விமானத்தில் சாதாரண விமானங்களை விட ஜன்னல்கள் பெரிதாக இருக்கும் என்பதால் வானில் பறந்தவாறு மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அழகை கண்டு ரசிக்கலாம். துவக்க விழாவில் கேரள அமைச்சர்கள் முஹம்மது ரியாஸ், ராஜீவ், சிவன்குட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர்களும் கடல் விமானத்தில் பயணம் செய்தனர். மக்கள் தொகை அடர்த்தி மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என அமைச்சர் முஹம்மது ரியாஸ் தெரிவித்தார். கொச்சி கடலில் இருந்து கிளம்பி, இன்று காலை 11 மணியளவில் மாட்டுப்பட்டி அணையில் கடல் விமானம் இறங்கியது.

Next Story

மேலும் செய்திகள்