மகளுக்கு எமனான அம்மாவின் சேலை - நினைத்து பார்க்க முடியா விபரீதம்

x

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே ஊஞ்சல் ஆடும்போது கழுத்தில் சேலை இறுக்கி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெண்ணாடம் அருகே உள்ள கோனூர் கிராமத்தை சேர்ந்த முத்துலிங்கம்-அனிதா தம்பதியரின் மூத்த மகள் ரிதுவர்ஷினி... அரசினர் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், வீட்டில் தனது அம்மாவின் சேலையில் ஊஞ்சல் கட்டி ரிதுவர்ஷினி விளையாடியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கழுத்தில் சேலை இறுக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்