டெல்டா முழுக்க பறக்கும் பகீர் வாட்ஸப் வீடியோஸ் - HM-ஐ சிக்க வைக்க டீச்சரே பரப்பினாரா?

x

``எவன் பாத்த வேலைடா இது?'' டெல்டா முழுக்க பறக்கும் பகீர் வாட்ஸப் வீடியோஸ்.. HM-ஐ சிக்க வைக்க டீச்சரே பரப்பினாரா?

தஞ்சையில், பள்ளி மாணவர்களுக்கு வாயில் டேப் ஒட்டப்பட்டதாக எழுந்த புகாரில், தலைமை ஆசிரியர் வாயில் டேப் ஒட்டவில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளதன் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு....

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா அய்யம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இச்சூழலில் அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் புனிதா மீது பரபரப்பு புகாரை முன்வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர் அந்த ஊர் மக்கள்...

அய்யம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வரும் 5 மாணவர்களின் வாயில் டேப் ஒட்டி சுமார் இரண்டு மணி நேரம் வகுப்பறையில் அமர வைத்ததாகவும், இதனால் மாணவர்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் புகாரளித்துள்ளனர்.

இது தொடர்பாக வாயில் டேப் ஒட்டியப்படி மாணவர்கள் இருந்த புகைப்படமும், வெளியாகி இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது...

இந்த சம்பவம் கடந்த 21ம் தேதி நடந்ததாகவும், அதே பள்ளியில் பணியாற்றி வரும் மற்றொரு ஆசிரியை, மாணவர்கள் வாயில் டேப் ஒட்டப்பட்டு இருந்ததை செல்போனில் புகைப்படம் எடுத்து அவற்றை மாணவர்களின் பெற்றோர் செல்போனுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது...

இதுகுறித்து கல்வி அலுவலரிடம் கேட்ட போது, ஆசிரியர் வகுப்பில் இல்லாததால், மாணவன் ஒருவரை வகுப்பறையை பார்த்து கொள்ள கூறியதாகவும், அந்த மாணவன் தான் வகுப்பறையில் பேசிய மாணவர்களின் வாயில் டேப் ஒட்டியுள்ளார் என்றும் கூறியுள்ளார்..

மேலும் ஆசிரியர்கள் டேப் ஒட்டவில்லை என்றும், இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்..

இந்நிலையில் ஆசிரியர்கள் எங்கள் வாயில் டேப் ஒட்டவில்லை என மாணவி ஒருவர் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது...

மாணவர்கள் மத்தியிலேயே இரு வேறு கருத்துகள் கூறும் நிலையில், தொடக்க கல்வி அலுவலர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருவதால் விரைவில் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது...


Next Story

மேலும் செய்திகள்