பேனாவிற்காக ஏற்பட்ட சண்டை - விடுதியில் இருந்து குதித்த மாணவி
பார்த்து பார்த்து வளர்த்த மகள் பேச்சு மூச்சின்றி கிடப்பதை கண்டு கதறித் துடிக்கும் இந்த தாயின் அழுகுரல் ஆந்திராவையே உலுக்கியுள்ளது....
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் நரசாராவ்பேட்டையில் உள்ள பாவனா இளநிலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இன்டர்மீடியேட் படித்து வந்திருக்கிறார் மாணவி அனுஷா...
விடுதியில் சக மாணவிகளுடன் பேனா தொடர்பாக சண்டை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக மாணவி அனுஷா மன வேதனையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது...
இந்நிலையில் மாணவி அனுஷா திடீரென விடுதியின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்....
இந்த சம்பவத்தின் பகீர் காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க செய்தன...
கீழே விழுந்து பலத்த காயமடைந்த அனுஷாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்த நிலையில், மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் தாய் கண்ணீர் விட்டு கதறும் காட்சி... காண்போரையும் கலங்கச் செய்தது...
அனுஷாவின் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பேனா தகராறு தான் காரணமா? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.