லிஸ்ட் போட்டு வரிசையாக இறக்கிய பள்ளிக்கல்வித்துறை | School | Education
லிஸ்ட் போட்டு வரிசையாக இறக்கிய பள்ளிக்கல்வித்துறை
பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மதுமதி பட்டியலிட்டுள்ளார்.பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல்கள், ஆசிரியர்களை தாக்குவது என பல்வேறு பிரச்சனைகள் தலைவிரித்து ஆடுவதாக அதிமுக குற்றம் சாட்டியிருந்த நிலையில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.அதில், பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க, மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு ஒவ்வொரு பள்ளிகளிலும் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மாணவர் மனசு புகார் பெட்டிகள் அமைத்து இருப்பதோடு, 14417, 1098 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் புகார் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.கிருஷ்ணகிரி விவகாரத்தில், 2 பள்ளிகளின் முதல்வர்கள், நிர்வாகிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறப்பு அதிகாரியின் நேரடி மேற்பார்வையில் பள்ளி நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக பள்ளி முதல்வர், ஆசிரியர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
என்.எஸ்.எஸ், சுற்றுலா போன்றவற்றுக்கு மாணவர்களை வெளியே அழைத்துச் செல்லும்போது, பெற்றோர்களின் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும் என்றும்,
10 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியை உடன் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக மதுமதி தெரிவித்துள்ளார்.