"சவுக்கு சங்கரை வெளியே விட்டால்..." - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சொன்ன பதில்

x

குண்டாஸை ரத்து செய்தால் சவுக்கு சங்கர் ஜாமீன் வெளியில் வந்து கஞ்சா விற்பார் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் கமலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் பதில் மனுவில், சவுக்கு சங்கருக்கு எதிரான பெரும்பாலன வழக்குகளில் ஜாமீன் கிடைத்திருப்பதை காரணமாக கொண்டு, தற்போது போடப்பட்டுள்ள குண்டாஸை ரத்து செய்ய முகாந்திரமாக கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் போதை பொருளை வைத்திருந்து, பிறருக்கு விநியோகித்துள்ளார், தற்போது போடப்பட்டுள்ள குண்டாஸை ரத்து செய்தால் ஜாமீன் வெளியில் வந்து பிறருக்கு மீண்டும் கஞ்சா விநியோகம் செய்வார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சவுக்கு சங்கர் பயணம் செய்த வாகனம், தங்கியிருந்த அறையிலும் கஞ்சா அரசிதழ் பதிவுபெற்ற அலுவலர்கள் முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்டதால், ஜோடிக்கப்பட்ட வழக்கு என கூற முடியாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மனுவை உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்