புடவை கட்டினால் கேன்சர்.. அதுவும் இப்படி கட்டினால் மிகமிக ஆபத்து - ஆய்வில் அதிர்ச்சி.. ஆனால் உண்மை

x

இந்திய பெண்களுக்கு சுடிதார், ஜீன்ஸ் என்பதை கடந்து புடவை மீது அளப்பரிய பிரியம்..

காலச்சூழலுக்கு ஏற்ப மாடர்னாக மாறினாலும் புடவை மீது பிரியம் உள்ள நிலையில், பேரிடியாய் வந்து விழுந்துள்ளது அதிர்ச்சி ரிப்போர்ட்...

பெண்கள் விரும்பி அணியும் புடவையால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக பகீர் கிளப்பியுள்ளது சமீபத்திய ஆய்வு முடிவுகள்...

ஆம், பெண்கள் புடவை அணிய இன்ஸ்கர்ட் எனப்படும் பாவாடை உடுத்துவது அவசியமாக உள்ள நிலையில், இடுப்பு வடத்தில் பாவாடையை இறுக்கமாக அணிகின்றனர்.

இப்படி தினசரி அணிவதால், இடுப்பு வடத்தில் காயம் ஏற்பட்டு நாள்பட்ட அழற்சி, தோல் புண் ஏற்படுகிறது. இது நாளடைவில் தோல் புற்றுநோய் உண்டாக வழிவகுக்கும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இது தொடர்பாக பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் வெளியிட்டுள்ள கட்டுரையில், பல ஆண்டுகளாக புடவை மட்டுமே அணிந்து வந்த 60 வயதை கடந்த மூதாட்டி இருவருக்கு பாவாடை இறுக்கத்தால் தோல் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்