மழை வெள்ளத்தில் மருத்துவமனைக்கு நீச்சல் அடித்துச் செல்லும் இளைஞர்.. அதிர்ச்சி காட்சி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முழங்கால் அளவுக்கு நீர் பெருகியது. குழந்தைகளை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்தவர்களும், கர்ப்பிணி பெண்களும், முதியவர்களும் அவதிக்குள்ளாகினர். மருத்துவமனைக்கு வந்த ஒருவர் தண்ணீரை பார்த்ததும் நீச்சலடித்தது சிரிப்பலையை ஏற்படுத்தியது. மருத்துவமனைக்கு உள்ளேயும் நீர் ஒழுகிய வேளையில் பணியாளர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு நீரை பிடித்து வெளியே ஊற்றினர். 108 ஆம்புலன்ஸ் மழையால் வெளியே செல்ல முடியாது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனையே இடிந்து விழுவதுபோல் இருப்பதாக தெரிவித்த மக்கள், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
Next Story