BREAKING || சென்னை ரயிலுக்கு காத்திருந்தவருக்கு அரிவாள் வெட்டு -ரயில் நிலையத்திலேயே துடித்த இளைஞர்

x

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் ஏற முயன்ற இளைஞருக்கு கை, தலை, முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நபரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற காவல்துறையினர்...

சங்கரன்கோவில் அருகே உள்ள வாசுதேவநல்லூரை சேர்ந்த செல்வராஜ்(24) என்ற இளைஞர் தனது நண்பருடன் பொதிகை இரயிலில் சென்னை செல்வதற்காக சங்கரன்கோவில் இரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

பொதிகை இரயிலானது சங்கரன்கோவில் இரயில் நிலையத்தில் உள்ள முதலாவது நடைமேடைக்கு வந்துள்ளது. அப்போது இரயிலில் ஏற முற்பட்ட செல்வராஜ் என்ற இளைஞரை அரிவாளுடன் வந்த மர்ம இளைஞர் ஒருவர் தலை, முகம், கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டி விட்டு அருகில் இருந்த முட்புதர் வழியாக தப்பியோடி விட்டார். இதில் ஒரு கை துண்டானது.

இதனைதொடர்ந்து இரத்த வெள்ளத்தில் அரை மணி நேரமாக உயிருக்கு போராடி கொண்டிருந்த செல்வராஜை காவல்துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்...

இச்சம்பவம் குறித்து டவுன் காவல்துறையினரும் இரயில்வே காவல்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

சென்னை செல்ல இரயிலில் ஏற முயன்ற இளைஞரை இரயில்வே நடைமேடையில் வைத்து மர்ம இளைஞர் ஒருவர் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் சங்கரன்கோவில் இரயில் பயணிகள் மத்தியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்