காதலி குடும்பம் சொன்ன வார்த்தை..5 முறை காதலன் செய்த பகீர் செயல்.. ஆடிப்போன எடப்பாடி
காதலி குடும்பம் சொன்ன வார்த்தை..5 முறை காதலன் செய்த பகீர் செயல்.. ஆடிப்போன எடப்பாடி
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காதலியை திருமணம் செய்ய வலியுறுத்தி, கிணற்றில் 5 முறை குதித்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். விஜய் என்பவரும், துர்காதேவி என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் மதுபோதையில், துர்காதேவியை திருமணம் செய்து கொள்ள அழைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு துர்கா தேவியின் குடும்பம் எதிர்ப்பு தெரிவிக்க, கிணற்றில் மதுபோதையில் 4 முறை விழுந்து, விஜய் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். தொடர்ந்து 5வது முறையும் குதித்து, மேலே வர முடியாமல் அவர் தவித்த நிலையில், தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
Next Story