"பிள்ளைகளுக்கு சுப நிகழ்ச்சி கூட செய்ய முடியவில்லை" - 32 ஆண்டுகளாக தவிக்கும் மக்கள்
வீரப்பன் கும்பல் வைத்த கண்ணிவெடியில் சிக்கி உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர். சம்பவம் நடந்து 32 ஆண்டுகளாகியும் தற்போது வரை நிவாரணத்திற்காக அலைக்கழிக்கப்படுவதாக வேதனை தெரிவித்த அவர்கள், வீடு, உறவு இன்றி ஆதரவின்றி நிற்பதாகவும், பிள்ளைகளுக்கு சுப நிகழ்ச்சி கூட செய்ய முடியாமல் தவிப்பதாகவும் கவலை தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
Next Story